சினிமாவில் 16 ஆண்டுகளை கடந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பல ஹிட் படங்கள்

பழனி படத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால், இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் காஜல். பேரரசு இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. இதனால் தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நடிகை காஜல் அகர்வால், நான் மகான் அல்ல படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன்பிறகு, மாற்றான், துப்பாக்கி போன்ற படங்களின் ஹிட்டால், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார் காஜல். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்த மகதீரா திரைப்படமும் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் ஆனது.

திருமணம் செய்த காஜல்

தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார் நடிகை காஜல் அகர்வால். முன்னணி நடிகையாக இருக்கும் போது பலர் திருமணம் செய்து கொள்ள யோசிக்கும் சமயத்தில், கௌதம் என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயான நடிகை காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடித்த ஹே சினாமிகா திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்தும் ரசிகர்கள்

பல வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகை காஜல் அகர்வால் சினிமா துறைக்கு வந்து 16 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் #16yearsofkajalAgarwal என்ற ஹாஸ்டேகை டிரெண்டாக்கி வருகின்றனர். 16 ஆண்டுகளை கடந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு சமூகவலைதளத்தில் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here