எஸ்ரா மில்லர் நாயகனாக நடித்துள்ள ‘தி ஃப்ளாஷ்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

குழப்பிவிடும் ஹீரோ

எஸ்ரா மில்லர் நாயகனாக நடித்துள்ள ‘தி ஃப்ளாஷ்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இது டிசி எக்ஸ்டெண்டட் யூனிவர்சின் கடைசி படமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். சிறுவயதாக இருக்கும் பொழுது இறந்து போன தனது தாயை காப்பாற்ற செல்லும் ஹீரோ கவனக் குறைவாக சில தவறுகளை செய்து விடுகிறார். இதனால் தன் யுனிவர்சையும் குழப்பி விடுகிறார் ஹீரோ. இதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் தி ஃப்ளாஷ் படத்தின் கதை.

எதிர்பார்ப்பில் பேட்மேன்

Ezra Miller, Sasha Calle, Michael Shannon, Ron Livingston, Maribel Verdu, Kiersey Clemons, Antje Traue, Michael Keaton உள்ளிட்ட பலரும் தி ஃப்ளாஷ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். Andy Muschietti இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் வரும் பேட்மேன் கதாபாத்திரம், படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்மேன் கதாபாத்திரத்தில் மைக்கேல் கீட்டன் நடித்துள்ளார் என்பதனால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தி ஃப்ளாஷ் திரைப்படம் ஜூன் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் மிரட்டலான டிரைலர் இதுவரை 3.7 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது. யூடியூப் ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here