மலையாளத்தில் வெளியாகி பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றிப் பெற்ற த்ரிஷ்யம் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

பல மொழியில் வெற்றி

ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இந்த படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சிங்களம் என்று பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இந்த படம் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன், கௌதமி நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட்டில் ரீமேக்

மலையாளத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது த்ரிஷ்யம் மற்றும் த்ரிஷ்யம் 2 படங்கள் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கின்றது. பனோரமா ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் இந்திய மொழிகள் அல்லாத பிற மொழிகளில் இதை ரீமேக் செய்வதற்கான உரிமையை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அங்கீகாரம்

ஏற்கனவே பல மொழிகளில் ஹிட் ஆன இந்த படம் தற்போது ஆங்கிலம், கொரியா உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்திய படம் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் இந்த படம் வெளியானால் வேற லெவல் மாசாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here