தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் இருக்கும் கருணாஸின் மகள் டயானா கருணாஸின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

லொடுக்கு பாண்டி

இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரம் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் கருணாஸ். நந்தா, திருடா திருடி, வில்லன், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த கருணாஸ், திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அசத்தி வருகிறார் நடிகர் கருணாஸ். அந்த வகையில் சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படத்திலும் நடித்து அசத்தினார்.

அழகான குடும்பம்

பிரபல பின்னணி பாடகியான கிரேஸை நடிகர் கருணாஸ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் கருணாஸுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகன் கென் ‘அசுரன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மகள் டயானா கருனாஸுக்கு சமீபத்தில் பெங்களூருவில் உள்ள சர்ச்சில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் கருணாஸ். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொண்ட இந்த திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றது. சினிமாவில் பார்க்கும் திருமணம் போல வெள்ளை உடையில் மணமகள் டயானா நடந்து வர, அவரது கையை பிடித்துக் கொண்டு கருணாஸும் அவரது மனைவி கிரேஸும் நடந்து வரும் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது. மணமக்களுக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here