விஜய் தேவரகொண்டா, சமந்தா இணைந்து நடிக்கும் “குஷி” படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய விஜய் தேவரகொண்டா நடிக்கும் குஷி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.குஷி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஹே ஷாம். சமீபத்தில் இந்த படத்தின் இயக்குநரான சிவ நிர்வானா, விஜய் தேவரகொண்டா மற்றும் இசையமைப்பாளரான ஹே ஷாம் ஆகியோர் சந்தித்த புகைப்படம் ஒன்று வைரலாக பரவியது. படைப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இது தொடர்பான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சாகுந்தலம்

தற்போது நடிகை சமந்தா சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் 17ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. உடல் நிலை சரியில்லாத சமயத்திலும் அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு இருக்கும் நடிகர் சமந்தாவிற்கு அவர் ரசிகர்கள் வாழ்த்துக்களையும், ஆதரவையும் கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here