ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற ‘பாரதி கண்ணம்மா’ தொடரின் இரண்டாம் பாகத்துக்கான ப்ரோமோ வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பானாலும் பாரதி கண்ணம்மா தொடருக்கு ரசிகர்கள் ஏராளம். பல எபிசோடுகளை கடந்து இப்பொழுது இந்த தொடர் முடிவடைந்துள்ளது. பாரதி கண்ணம்மா தொடரை பற்றி ட்ரோல்கள் வலம் வந்தாலும், பல குடும்பங்கள் இந்த தொடரை ரசித்து பார்த்து வந்தனர்.

சீசன் 2

பாரதி கண்ணம்மா தொடர் முதல் சீசன் முடிவடைந்துள்ள நிலையில், இத்தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. தற்போது சீரியல்கள் சீசன் சீசன் ஆக எடுப்பது ட்ரெண்ட் ஆகி உள்ளது. அந்த வகையில் சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, கனா காணும் காலங்கள் போன்ற விஜய் டிவி தொடர்கள் இரண்டு சீசன்களை தாண்டி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் பாரதி கண்ணம்மாவும் சீசன் 2-க்கான ப்ரோமோ வெளிவந்துள்ளது.

யார் நாயகன்?

இந்த இரண்டாம் சீசனில் ரோஜா தொடரில் ஹீரோவாக நடித்த சிபு சூரியன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் நாயகியாக வினுஷா தேவி நடிக்கிறார். இவர் சீசன் 1இல் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசன் 2வின் புது ப்ரோமோ விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக ப்ரோமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சீசன் போலவே இந்த சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here