தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அதன் படப்பிடிப்புக்காக அவர் காஷ்மீர் புறப்பட்டார் என இணையத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தளபதி 67

‘வாரிசு’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். தளபதி 67 படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது. 

விமானத்தில் பறந்த திரிஷா

தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பேசப்பட்டது. இந்த நிலையில் அப்படத்தின் படப்பிடிப்புக்காக திரிஷா காஷ்மீர் செல்லவுள்ளதாகவும், இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டதாகவும் தெரிவித்து, பலரும் திரிஷாவின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here