குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகை சாக்ஷி அகர்வால் மூவர்ணத்திலான ஆடையை அணிந்து எடுத்து புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளம் நடிகை

ரஜினிகாந்தின் ‘காலா’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’, சுந்தர் சி.யின் ‘அரண்மனை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அவர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘நான் கடவுள் இல்லை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பாராட்டு

இந்திய நாட்டின் 74-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் நடிகை சாக்ஷி அகர்வால் மூவர்ணத்திலான ஆடையை அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குடியரசு தினத்திற்காக அதிரடி காட்டிய சாக்ஷி அகர்வாலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சாக்ஷி அகர்வாலின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here