உரிய அனுமதியின்றி வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் சிறப்புக் காட்சிகளை திரையிட்ட திரையரங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’ மற்றும் நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

நோட்டீஸ்

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி வாரிசு, துணிவு பட சிறப்புக் காட்சிகளை வெளியிட்ட 8 திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here