விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்றுள்ள ”ரஞ்சிதமே” பாடல் வெளியாகி 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

சூப்பர் ஹிட்

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷியாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்தார். தமன் இசையமைத்திருந்தார். பொங்கல் விருந்தாக வெளியான ‘வாரிசு’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, வசூலில் சாதனை படைத்து வருகிறது.

புதிய சாதனை

‘வாரிசு’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ மற்றும் சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. அந்த வரிசையில் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here