ஆந்திராவுக்கு சென்ற நடிகை நித்யா மேனன் அங்குள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

சிறப்பான நடிப்பு

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன். தமிழில் வெப்பம், மெர்சல், ஓ கே கண்மணி, சைக்கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாடம் எடுத்த நடிகை

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயா பாளையத்தில் உள்ள கல்கி பகவானின் ஆசிரமத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடிகை நித்யா மேனன் தவறாமல் வந்து செல்வது வழக்கம். இரு தினங்களுக்கு முன் அந்த ஆசிரமத்திற்கு நடிகை நித்யா மேனன் வந்தார். அப்போது அங்கு நடைபெற்ற சிறப்பு தியானத்தில் கலந்து கொண்டார். பின்னர் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்தார். அங்குள்ள மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்றுக்கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இதற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here