ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘லவ் டுடே’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ள நிலையில் வசூலிலும் புதிய சாதனை படைத்துள்ளது.

‘லவ் டுடே’

கோமாளி திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘லவ் டுடே’. பிரதீப் இயக்கி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். கடந்த மாதம் 4-ம் தேதி வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் ஆதரவு பெற்று வெற்றி அடைந்தது.

வசூல் சாதனை

‘லவ் டுடே’ திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதனால், இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 50 நாட்களை கடந்துள்ள ‘லவ் டுடே’ திரைப்படம், இதுவரை ரூ.90 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here