நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் 2 தெலுங்கு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாவது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

தனித் திறமை

‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார். 

ரசிகர்கள் குஷி

இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடித்திருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ என்ற திரைப்படத்திலும், மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்திலும் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சங்கராந்தி திருவிழா விடுமுறை தினத்தில் வெளியாகிறது. ஒரே நாளில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி இருக்கும் இரண்டு படங்களும் வெளியாவதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here