நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திடீரென அனைத்து புகைப்படங்களையும் நீக்கியதால் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்படைந்துள்ளது.

அற்புதமான நடிப்பு

சிம்பு நடிப்பில் வெளியான “அச்சம் என்பது மடமையடா” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், அடுத்து உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும், சத்ரியன், தேவராட்டம் போன்ற ஒரு சில படங்களில் நடித்தார்.

நீக்கம்

சமீபத்தில் அவர் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் காதலில் இருப்பதை அறிவித்தார். மேலும் அவர்களின் திருமணம் வரும் 28-ம் தேதி சென்னையில் நடக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மஞ்சிமா மோகன் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here