விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பிரபலமான இவர், ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரச்சிதா சீரியல் நடிகரான தினேஷ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சக போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவிடம் அத்துமீறுவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். ராபர்ட் மாஸ்டரின் இந்த நடவடிக்கையால் ரச்சிதாவின் கணவர் தினேஷ் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தினேஷ் மட்டுமின்றி அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் செம கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.