மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

“ஏழு கடல் ஏழு மலை”

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார் இயக்குநர். இவர் தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை இயக்கி வருகிறார். மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கவனம் ஈர்க்கும் போஸ்டர்

இந்நிலையில், “ஏழு கடல் ஏழு மலை” படக்குழு நடிகர் நிவின் பாலியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here