சின்னத்திரை நடிகை ஆலியா மானசா சமீபத்தில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது அவர் மீண்டும் சீரியலுக்கு கதாநாயகியாக நடிக்க இருக்கும் நிலையில் தன்னுடைய உடல் எடையை வெகு விரைவில் கடினமாக குறைத்து இருக்கிறார். சமீபத்தில் ஒர்க் அவுட் தொடங்கி இருந்த ஆலியா மானசா, 2 மாதங்களுக்குள் 10 கிலோ எடையை குறைத்து இருக்கிறார். அதை பாராட்டி அவருடைய கணவர் சஞ்சீவ், ஆலியாவிற்கு ஹேண்ட் பேக் ஒன்றை பரிசளித்துள்ளார். அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஆலியாவை பாராட்டி இருக்கிறார் சஞ்சீவ். என்னுடைய உண்மையான இன்ஸ்பிரேஷன் நீதான் என்றும் ஆலியாவை சஞ்சீவ் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.