தமிழில் மாப்பிள்ளை, எங்கேயும் எப்போதும், வேலாயுதம், சிங்கம் 2, அரண்மனை, புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹன்சிகா. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா வசம் தற்போது 4 தமிழ் படங்களும், 2 தெலுங்கு படங்களும் உள்ளன. இந்த நிலையில், நடிகை ஹன்சிகாவும் – அவரது பிசினஸ் பார்ட்னர் சோகேலும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். பிரான்ஸில் உள்ள ஈபிள் டவர் முன்பு சோகேல் காதலை வெளிப்படுத்திய புகைப்படங்களை ஹன்சிகா சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் ஹன்சிகா திருமணம் செய்ய இருக்கும் சோகேல் கத்தூரியா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் கடந்த 2016-ம் ஆண்டு அவருக்கும் ரிங்கி எங்கிற பெண்ணுக்கும் திருமணம் நடந்த தகவலும் அதுகுறித்த வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி அந்த திருமண நிகழ்வுகளில் சங்கீத் நிகழ்ச்சி உள்ளிட்ட சில நிகழ்வுகளில் ஹன்சிகாவும் பங்கேற்றுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here