ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ஓ மை கோஸ்ட்”. கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், நடிகர் சதீஷ், நடிகைகள் தர்ஷா குப்தா, சஞ்சனா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “ஓ மை கோஸ்ட்” திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் சன்னி லியோன் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது டிக்டாக் புகழ் ஜிபி முத்து சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி விடும் போது அரங்கம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here