விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி தற்போது 6-வது சீசனை பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, நடன இயக்குநர் சாந்தி ஆகியோர் வெளியேறிய நிலையில், தற்போது கானா பாடகர் அசல் கோளாறும் வெளியேறி உள்ளார். பெண்களிடம் தொட்டு, நெருங்கி பழகினார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாக இருந்தது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த அசல் கோளாறு, இன்டர்நெட்டில் தன்னைப் பற்றிய செய்திகளை பார்த்து மிகவும் கஷ்டப்பட்டதாகவும், ஹர்ட் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here