நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள “ஜான்சி” வெப் தொடர் OTT-யில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அஞ்சலி. ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர், ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் எங்கேயும் எப்போதும், மங்காத்தா, தூங்காநகரம், தம்பி வெட்டோத்தி சுந்தரம், கலகலப்பு, மாப்ளசிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் அஞ்சலி நடித்துள்ளார். ஒருசில வெப் தொடர்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

OTT-யில் வெளியீடு

இந்த நிலையில், அஞ்சலி நடித்துள்ள ‘ஜான்சி’ என்ற வெப்தொடர் இன்று முதல் Hotstar OTT தளத்தில் வெளியாகி உள்ளது. விஷால் நடித்த ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் திரு, இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார். திடீரென ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட அஞ்சலி பழைய நினைவுகளை எல்லாம் மறந்துவிட்டு கணவர் குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மீண்டும் பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது தான் இந்த தொடரின் கதை.

டூப் இல்லை

இந்த வெப்தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அஞ்சலி, டூப் இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகளில் மிகவும் அபாரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Hotstar OTT தளத்தில் வெளியாகியிருக்கும் ‘ஜான்சி’ தொடர் விறுவிறுப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here