படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயம் காரணமாக டைட்டானிக் பட நாயகி கேட் வின்ஸ்லெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
டைட்டானிக் ஹீரோயின்
உலகப்புகழ் பெற்ற டைட்டானிக் படத்தின் கதாநாயகி கேட் வின்ஸ்லெட், தற்போது ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைதொடர்ந்து எலன் குராஸ் இயக்கத்தில் ‘லீ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆண்டனி பென்ரோஸ் எழுதிய ‘தி லைஃப்ஸ் ஆஃப் லீ மில்லர்’ என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது.
படுகாயம்
இந்நிலையில், குரோஷியா நாட்டில் நடைபெற்று வரும்’லீ’ படத்தின் படப்பிடிப்பின் போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் கேட் வின்ஸ்லெட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், திட்டமிட்டபடி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.