சின்னத்திரையின் முக்கிய நடிகைகளில் ஒருவரான ரக்ஷிதா மகாலட்சுமி விஜய் டிவியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைதொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் 2, சீசன் 3 ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். இவர் நடித்த ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பரபரப்பாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியலில் இருந்த ரக்ஷிதா மகாலட்சுமி திடீரென விலகுவதாக அறிவித்தார். கலர்ஸ் தமிழின் ‘இது சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் அவர் நடித்து வந்தார். சாதனா என்ற கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்த ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது விரக்தியின் உச்சத்தில் இருப்பது போல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; சாதனா கேரக்டர் இப்படி முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. கருத்துள்ள சீரியலை முடித்ததற்காக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு வாழ்த்தக்கள். இந்த சீரியலில் நடிக்க வேண்டாம் என்று என்னிடம் சொல்லி சிரித்தவர்கள் அனைவரையும் திட்டிவிட்டு இந்த சீரியலில் நடிக்க வந்தேன். ஆனால் நான் தவறான முடிவு எடுத்துவிட்டேன் என்று கலர்ஸ் டிவி உணர வைத்துள்ளது. இவ்வாறு ரக்ஷிதா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here