விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6-க்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாட்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் விதி. சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த செய்திகள் அதிகளவில் இடம்பெறுவதால், இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்து வருகின்றனர்.

மீண்டும் கமல்

இதற்கு முன் நடந்த அனைத்து சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தாலும், இடையே ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகர் சிம்புவும், நடிகை ரம்யா கிருஷ்ணனும் சில நாட்கள் தொகுத்து வழங்கினர். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் மீண்டும் தொகுத்து வழங்குவாரா? அல்லது வேறு ஏதேனும் திரைப்பிரபலங்கள் தொகுத்து வழங்குவார்களா? என்ற கருத்துக்கள் இணையத்தில் பரவி வந்தது. இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதற்கான புரோமோ வீடியோ வெளியாகி அனைவரையும் ஈர்த்துள்ளது. வேட்டைக்கு ரெடியா? என்று கமல் பேசும் வசனத்துடன் வெளியாகியிருக்கும் புரோமாவை பார்த்து, நாயகன் மீண்டும் வரார் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here