இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டதையடுத்து நடிகை நயன்தாரா சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார்

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அவரை அழைக்கத் தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் நயன். முதன்முதலில் ‘மனசினக்கரே’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான நயன்தாரா, அதன்பிறகு தமிழில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமானார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் அவர், தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது ஷாருக்கான் ஜோடியாக நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார்.

விலக முடிவு?

17 வருடங்களாக திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் தாய்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தங்களது தேனிலவை கொண்டாடி வருகிறனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா கைவசம் உள்ள படங்களை முடித்து விட்டு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிக்க நயன்தாராவுக்கு ஆர்வம் குறைந்துவிட்டதாகவும் இதனாலேயே சினிமா பணிகளில் இருந்து விடுபட்டு கணவருடன் வெளிநாடுகளில் சுற்றி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here