தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நமீதா தனது திறமையான நடிப்பாலும், கவர்ச்சியாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தினார். பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் வீரேந்திர சவுத்ரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நமீதா, தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளம் மூலம் அறிவித்தார். இந்த நிலையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு நமீதாவும், அவரது கணவரும் 2 கைக்குழந்தைகளை கையில் தூக்கிக்கொண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. நமீதாவுக்கும், இரட்டை குழந்தைகளுக்கும் ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here