‘கோப்ரா’ திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீடு தேதியை நடிகர் விக்ரம் அறிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த  ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. தற்போது அதன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், டிவிட்டர் ஸ்பேஸில் ‘கோப்ரா’ படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ஆக்ஸ்ட் மாதம் 31-ம் தேதி ‘கோப்ரா’ திரைப்படம் ரிலீஸாகும் எனவும், அதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் படத்தின் டிரெய்லர் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here