இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் லிடியன் நாதஸ்வரம் நடத்திய இசைக்கச்சேரி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. தனக்கே உரிய பாணியில் லிடியன் தனது கண்களை மூடிக்கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு கைகளில் மிகவேகமாக பியானோவை இசைத்து அசத்தினார். உலக புகழ்பெற்ற இரண்டு தீம் மியூசிக்குகளை இரண்டு பியானோக்களில் ஒரே நேரத்தில் இசைத்து அசத்தினார். ஒரு வெளிநாட்டவர் லிடியனின் இசையால் துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு முறையும் லிடியன் வேகமாக இசைக்கும் போதெல்லாம், அவர் மெய்மறந்து உற்சாகமாக கொண்டாடினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here