வெள்ளித்திரையில் துணை கதாபாத்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வித்யு ராமன். சின்னத்திரையில் தோன்றிய அவர் குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனது சமையல் திறமையை வெளிப்படுத்தினார். சமீபத்தில் சமூக வலைதளத்தில் நடிகை வித்யு ராமன் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறினார். ரசிகர் ஒருவர் பிக் பாஸ் போவீங்களா என்று கேட்டதற்கு, வேண்டவே வேண்டாம் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். குக் வித் கோமாளி கப்  உங்களுக்குத்தான் என்ற கேள்விக்கு, உங்கள் அன்பு தான் எனக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார். முத்துக்குமாரை ஏன் வெறுக்கிறீர்கள் என்பதற்கு, முத்துகுமார் ஒரு திறமையான மனிதர், கண்டிப்பா பைனல்ஸ் வந்துருக்கணும் என வித்யு ராமன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here