சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘டான்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் OTT-யில் வெளியாக உள்ளது.

அமோக வரவேற்பு

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டான்’. லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். கடந்த 13ம் தேதி வெளியான ‘டான்’ திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

OTT ரிலீஸ்

‘டான்’ திரைப்படம் வெளியாகி உலகளவில் ஐந்து நாட்களில் ரூ.50 கோடி வசூலித்த நிலையில், 12 நாட்களில் ரூ.100 கோடியை தாண்டி சாதனை படைத்தது. இந்நிலையில், ‘டான்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் OTT-யில் ஜூன் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here