உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர் 25 நாட்களை எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலால் இரு தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது; “உலகில் நடக்கும் பல உண்மை சம்பவங்கள் உங்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயங்கரமான விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன. ரஷ்யாதான் இந்தப் போரைத் தொடங்கியது. இது ரஷ்ய மக்களின் போர் அல்ல. இந்தப் போரைத் நீங்கள் தான் தொடங்கினீர்கள். நீங்கள் இந்தப் போரை முன் எடுத்து செல்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் இந்தப் போரை உங்களால் நிறுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here