தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து புத்தரிசிப் பொங்கல் வைத்து படையலிட்டு, மக்கள் பாரம்பரிய முறைப்படி இப்பண்டிகையை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர். அதேபோல் திரைப்பிரபலங்கள் பலரும் பொங்கல் பண்டிகையை தங்களது குடும்பத்துடன் கொண்டாடினர். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் தங்களது பொங்கல் கொண்டாட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here