துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை நயன்தாராவை தனுஷ் பட நடிகை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

காதலனுடன் சுற்றுலா

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, ஆண்டுதோறும் ஓய்வுக்காகவும், சுற்றுலா செல்லவும் ஏதாவது ஒரு நாட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை துபாயில் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நாயகிகள் சந்திப்பு

நடிகை நயன்தாரா துபாயில் இருந்த போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை மெஹ்ரீன் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படத்தை மெஹ்ரீன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை மெஹ்ரீன், தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here