பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த 1994 ஆம் ஆண்டு நடிகை லலிதாகுமரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பின்னர் இந்தி நடன இயக்குனர் போனி வர்மாவை நடிகர் பிரகாஷ் ராஜ் காதலித்து, 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அவர்கள், தங்களின் 11 ஆம் ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடினர். அப்போது தனது மகன் வேதாந்த் மற்றும் மகள்கள் முன்னிலையில் அவர்கள் மீண்டும் ஒரு முறை திருமணம் செய்துகொண்டனர். ’என் மகனுக்காக, நானும் போனி வர்மாவும் மீண்டும் திருமணம் செய்துகொண்டோம்’ என்று நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here