நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

விவேக் மரணம்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்ட விவேக், கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். விவேக்கின் மரணம் திரையுலகினர், பொதுமக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சி அடையவைத்தது. மரணமடைவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு, மக்களுக்கிடையில் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

விசாரணைக்கு ஏற்பு

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here