‘குட் டே’ பிஸ்கட்டிற்கான விளம்பரத்தில் இயக்குநர் கெளதம் மேனனும், நடிகர் ஆர்.ஜே. பாலாஜியும் இணைந்து அசத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னணி இயக்குநர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் மேனன். தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யாவின் ‘நவரசா’ என்ற வெப் சீரிஸும், சிலம்பரசனின் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ திரைப்படம் உட்பட மூன்று படங்கள் வரிசையாக உள்ளது. இந்நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் ‘குட் டே’ பிஸ்கட்டிற்கான விளம்பர படத்தில் நடித்துள்ளார்.

வைரல் வீடியோ

இந்த விளம்பர படத்தில் இயக்குநர் கெளதம் மேனனுடன் இணைந்து பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜியும் நடித்துள்ளார். அதில், ஆர்.ஜே. பாலாஜி போல் கிரிக்கெட் கமெண்ட்ரி பேசி இயக்குனர் கௌதம் மேனன் அசத்தியுள்ளார். அதேபோல், கௌதம் மேனன் போல் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி ஆர்.ஜே. பாலாஜி அசத்தியுள்ளார். இந்த இரு விளம்பர வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here