அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மே 24-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய பொருட்களான காய்கறி கடைகள் உள்ளிட்ட பல கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறிகள், பழங்கள் கிடைத்திட மாநகராட்சி நிர்வாகம் சார்பில், நடமாடும் காய்கறி, பழங்கள் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் உத்தரவு

இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர், ஊரடங்கில் பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் எனக் கூறினார். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் கிடைப்பதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நகர்புறத்தை போன்று கிராமப்புறங்களிலும் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் அவர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here