பிரபல இந்தி நடிகை கரீனா கபூருக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

முன்னணி நடிகை

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கரீனா கபூர். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ஹிட் ஏராளமான படங்களை கொடுத்துள்ளார். இவரும், நடிகர் சயிப் அலி கானும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு 2016-ல் ஆண் குழந்தை பிறந்தது.

ஆண் குழந்தை

இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான கரீனாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும், சேயும் நலமுடன் இருப்பதாகவும் கரீனாவின் கணவர் சயிப் அலி கான் தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி எனவும் அவர் கூறியுள்ளார். அமிர்கான் நடிக்கும் “லால் சிங் சத்தா” எனும் படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here