அஜித்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘பில்லா’ திரைப்படம் தமிழகம் முழுவதும் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

பிளாக் பஸ்டர் ஹிட்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, நமீதா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பில்லா’. ரஜினியின் ‘பில்லா’ படத்தின் ரீமேக் திரைப்படமான இந்தப் படம், கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து 2012ஆம் ஆண்டு ‘பில்லா’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெறவில்லை.

ரீ-ரிலீஸ்

இந்த நிலையில், அஜீத் ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய திரைப்படங்களில் ஒன்றான ‘பில்லா’ திரைப்படம் மீண்டும் புதிய தொழில்நுட்பத்தில் வரும் மார்ச் 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கு சென்றாலும் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை கேட்டு வரும் அஜித் ரசிகர்களுக்கு, தற்போது ‘பில்லா’ திரைப்படம் புதிய தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ள செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் ‘பில்லா’ படத்தின் ரிலீசை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here