மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டிராக்டர் ஓட்டும் ராகுல்காந்தி

கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.,யான ராகுல்காந்தி, அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி தனது தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் ராகுல்காந்தி பங்கேற்றார். திருக்கைப்பேட்டையில் இருந்து மூட்டில் வரை 9 கிலோ மீட்டர் தூரம் நடந்த இப்பேரணியில் ராகுல்காந்தி டிராக்டர் ஓட்டினார்.

வலியை புரிந்துகொள்ளவில்லை

பேரணிக்கு பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல்காந்தி மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது; இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே பார்க்கிறது. ஆனால் மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை. தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கட்டாயப்படுத்தப்படாவிட்டால் இந்த 3 புதிய சட்டங்களை அவர்கள் திரும்பப் பெறப்போவதில்லை. இந்த 3 சட்டங்கள் இந்தியாவில் விவசாய முறையை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. பாரத மாதாவுக்கு சொந்தமான ஒரே தொழில் விவசாயம். மற்ற ஒவ்வொரு வணிகமும் மற்றவர்களுக்கு சொந்தமானது. ஒரு சிலர் விவசாயத்தை சொந்தமாக்க விரும்புகிறார்கள். இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here