மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிக்பாஸ் புகழ் தர்ஷனும், லாஸ்லியாவும் ஜோடியாக நடிக்க உள்ளனர்.

சூப்பர் ஹிட் படம்

கடந்த 2019 ஆம் ஆண்டு ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது. சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

தமிழ் ரீமேக்

‘கூகுள் குட்டப்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய வேடம் ஏற்றுள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் இப்படத்தை, அவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய சரவணன், சபரி ஆகியோர் இயக்க உள்ளனர். ‘கூகுள் குட்டப்பன்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் நாயகன் தர்ஷனும், நாயகி லாஸ்லியாவும் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here