சமீபத்தில் வெளியான KGF 2 திரைப்படத்தின் டீசர் மாஸ்டர் பட டீசர் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

புதிய சாதனை

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த KGF திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பிரபாஸுக்கு ஒரு பாகுபலி போன்று, யாஷுக்கு KGF படம் அமைந்தது. அந்தப் படம் மூலம் இந்தியா முழுவதும் அவர் பிரபலமானார். இதையடுத்து KGF படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். கதாநாயகன் யாஷின் பிறந்தநாளையொட்டி KGF 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான சில மணிநேரத்தில் யூடியூபில் அதற்கு 2 மில்லியன் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது. குறைந்த நேரத்தில் அதிகம் லைக்ஸ் பெற்ற இந்திய பட டீசர் என்கிற பெருமையை KGF 2 பெற்றுள்ளது. இதற்கு முன் 1.85 மில்லியன் லைக்ஸ்களை பெற்று மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது KGF 2 படத்தின் டீசர் அதனை முறியடித்துள்ளது. தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் நடிகர் பெருமிதம்

பிறந்தநாள் கொண்டாடும் யாஷுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். KGF 2 படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். தன் கெரியரில் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததே இல்லை என சஞ்சய் தத் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here