கயல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை ஆனந்திக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இளம் நடிகை

வெற்றிமாறன் தயாரிப்பில் மணிமாறன் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பொறியாளன்’. ஹரிஸ் கல்யாண் நாயகனாக நடித்த இப்படத்தில் ஆனந்தி கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்பு பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான ‘கயல்’ திரைப்படத்தில் நாயகியாக ஆனந்தி நடித்தார். அப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் இவர் ‘கயல்’ ஆனந்தி ஆனார்.

தெலுங்கிலும் கலக்கல்

த்ரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள், மன்னர் வகையறா என தொடர்ந்து பல படங்களில் ஆனந்தி நடித்தார். தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், கமலி ஃப்ரம் நடுக்காவேரி மற்றும் தெலுங்கில் உருவாகும் ஜாம்பி ரெட்டி படங்களை கைவசம் வைத்துள்ளார்.

திடீர் திருமணம்

இந்நிலையில், நடிகை ஆனந்திக்கும், அக்னிச் சிறகுகள் படத்தின் இணை இயக்குநர் சாக்ரடீஸ்க்கும் நேற்று மாலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள அக்னிச் சிறகுகள் படத்தின் இயக்குநர் நவீன், ஆனந்தி – சாக்ரடீஸ் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here