2021-ம் ஆண்டு பிறந்து முதன்முறையாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆறுதல்

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று தங்கத்தின் விலை சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 37 டாலர் குறைந்ததை அடுத்து, இந்தியாவிலும் இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளது.

திடீர் சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,805-க்கும், ஒரு சவரன் ரூ.38,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,200-க்கும் விற்பனையாகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இந்த நேரத்தில், தங்கம் விலையில் சரிந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here