தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடிகர் கமல்ஹாசனுக்கு ஆரி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

பிக் பாஸ்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் நடிகைகள் ரேகா, ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, ஆரி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ஆஜித், சம்யுக்தா, ஷிவானி நாராயணன், கேப்ரியலா, அர்ச்சனா உள்ளிட்ட பல போட்டியாளர்கள் பங்கேற்றனர். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களே மீதமுள்ள நிலையில் ஆரி, பாலாஜி முருகதாஸ், ஷிவானி, ரம்யா பாண்டியன், சோம் சேகர், ரியோ ராஜ், கேப்ரியலா ஆகிய 7 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். கடந்த 3 சீசன்களைப் போலவே, இந்த சீசனுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மற்ற போட்டியாளர்களைவிட நடிகர் ஆரிக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இன்ப அதிர்ச்சி

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காரில் இருந்தபடி மக்களிடம் பிரச்சாரம் செய்தபோது, ஆரியின் ரசிகர்கள் திடீரென ஆரி… ஆரி… ஆரி என கோஷமிட்டனர். இதைப்பார்த்த கமல், இன்ப அதிர்ச்சியில் திகைத்துப் போனார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here