நடிகரும், நடன இயக்குனரருமான பிரபுதேவா ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காதல், பிரிவு

நடன இயக்குனராக இருந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் பிரபுதேவா. தமிழில் விஜய், ஜெயம் ரவி, விஷால் மற்றும் இந்தியில் சல்மான்கான், அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கான் போன்றோரை வைத்து படங்கள் இயக்கியுள்ளார். பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் பல வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக இருந்து வந்த நிலையில், பின்னர் பிரிந்தனர். நயன்தாராவை மணக்க முதல் மனைவியையே விவாகரத்து செய்த நிலையிலும், இவர்களது திருமணம் நடக்கவில்லை. தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார்.

ரகசிய திருமணம்?

பிரபுதேவாவிடம் அவரது குடும்பத்தினர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் உறவுக்கார பெண்ணுடன் பிரபுதேவாவுக்கு தற்போது காதல் மலர்ந்துள்ளதாகவும், அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், பிரபுதேவா தரப்பில் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here