தமிழில் முன்னணி நடிகையான நயன்தாராவைப் போல் நடிகை வனிதா விஜயகுமாரும் தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், கடந்த ஜூன் மாதம் பீட்டர்பால் என்பரை திருமணம் செய்துகொண்டு சர்ச்சையில் சிக்கினார். தனக்கு எதிராக பேசியவர்களை வெளுத்து வாங்கிய வனிதா, சமூக வலைத்தளங்களில் பேச்சுப் பொருளாக மாறினார். இருப்பினும் அனைத்தையும் துணிச்சலாக எதிர்கொண்ட அவர், காதல் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

வனிதா விஜயகுமார், கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாட கோவா சென்றுள்ளார். பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் வனிதா விஜயகுமார், கோவாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளைக் கொண்டாட அவருடன் நயன்தாரா கோவா சென்றிருந்த நிலையில், தற்போது பீட்டர்பால் – வனிதா ஜோடி பிறந்தநாள் பயணமாக கோவா சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here