கோவிலில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது ஆல்யா மானசா நடனமாடும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்ஸ் அவரை திட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஷூட்டிங் ஸ்பாட் அலப்பறைகள்

படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகள் தங்களுக்கு கிடைக்கும் சின்னச் சின்ன நேரங்களில் கூட வீடியோக்களையும், சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களையும், புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஆல்யா மானசா, தற்போது ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடிக்க தயாராகிவிட்டார். அதன் புரொமோ வீடியோக்களும், ஷூட்டிங் தொடங்குவதற்காக பூஜை போட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெருமளவு பகிரப்பட்டது. அந்த சீரியலின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

கோவிலில் நடனம்

சமீபத்தில் ‘ராஜா ராணி 2’ சீரியல் ஷூட்டிங் சிவன் கோவிலில் நடந்துள்ளது. அப்போது நடிகை ஆல்யா மானசா, தனக்கு கிடைத்த சிறிய நேரத்தில் நடனமாடி, அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள், டான்ஸ் ஆடுவதற்கு வேற இடமே கிடைக்கவில்லையா, கோவிலுக்கு போயா இப்படி டான்ஸ் ஆடுவது எனக் கேட்டு விளாசித் தள்ளுகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், ஷூட்டிங் போனோமா, நடிச்சோமா, வந்தோமான்னு இல்லாம, அங்க போய் எதுக்கு டான்ஸ் ஆடிக்கிட்டு என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது பெருமளவு சர்ச்சை கிளம்பிய நிலையில், இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வரப் போகிறதோ என்று ஆல்யா சிறிது கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here