தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் யார் அரசியலில் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு நடிகை நமீதா சூசகமாக பதில் கூறியுள்ளார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்

“எங்கள் அண்ணா” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நமீதா. அதன்பின் மகா நடிகன், இங்கிலீஷ்காரன், பம்பரக் கண்ணாலே, தகப்பன்சாமி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா, குரு சிஷ்யன், இளைஞன் போன்ற பல படங்களில் நடித்தார். திரைப்படங்களில் கவர்ச்சிப் புயலாக தோன்றி, கொஞ்சும் தமிழில் பேசி ரசிகர்களை தன் வசப்படுத்தினார். எல்லோரையும் ‘மச்சான்’ என செல்லமாக கூப்பிட்டு, தமிழ் ரசிகர்களுக்கு செல்லப் ஹீரோயினாகவே மாறிவிட்டார். சினிமா மட்டுமின்றி திருமண வாழ்க்கையிலும் சந்தோஷமாகவும், வெற்றிகரமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நமீதா. சமீபத்தில் அவர் கணவர் மீது அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் அரசியலிலும் நேரத்தை ஒதுக்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

சூசகமாக பதில்

சமீபத்தில் நமீதா அளித்த பேட்டி ஒன்றில், முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், சூர்யா இவர்களுள் யார் அரசியல் வாழ்க்கையில் ஜெயிப்பார்கள் என்று கேள்விக்கு சுவாரஸ்மான பதிலளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “நான்கு பேருமே பெரிய அளவு பலம் மிகுந்தவர்கள். ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இரண்டு கண்கள் மாதிரி. விஜய் மூளை மாதிரி. சூர்யா இதயம் மாதிரி” எனக் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்கு நான் வந்து 16 வருடங்கள் ஆகிறது. சென்னை எனது சொந்த ஊர் ஆகவே மாறிவிட்டது. தேர்தலில் போட்டியிட்டால் இங்கே இருந்து தான் போட்டியிடுவேன். திரைப்படங்கள் இணையதளத்தில் வெளிவதை வரவேற்கிறேன். இனிமேல் இணைய தளம் தான் வருங்காலம். கொரோனா ஒரு சில நல்ல மாற்றங்களையும் தந்துள்ளது. இவ்வாறு நமீதா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here