போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி சிக்கனும், சிகரெட்டும் கேட்டு அடம்பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப் பொருள்

திரையுலகில் போதைப் பொருட்கள் தாராளமாக புழங்குவதாக பரபரப்பான குற்றச்சாட்டுக்குகள் எழுந்த வண்ணம் உள்ளன. தடை செய்யப்பட்ட MDMA போதை மாத்திரைகளை பயன்படுத்தியதாக பிரபல கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பெங்களூரூவில் உள்ள பரப்பன அக்ரஜாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அடம்பிடிக்கும் நடிகை

முதல்நாள் சிறையில் கொடுத்த உணவை வாங்கி சாப்பிட்ட நடிகை சஞ்சனா, அதன்பின் தனக்கு தினமும் சாப்பிட கோழி இறைச்சி வேண்டும் என்று கேட்டு வருவதாக தெரிகிறது. கடந்த வியாழக்கிழமை இரவு கோழி இறைச்சி கேட்டு சிறை அதிகாரிகளிடம் அடம்பிடித்த சஞ்சனா, சிகரெட் வேண்டுமென்றும் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறை அதிகாரிகள், வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே சிறையில் அசைவ உணவு வழங்குவோம் என திட்டவட்டமாக கூறினர். இந்த நிலையில் தனக்கு சிகரெட், கோழி இறைச்சி வேண்டும் என்று நேற்றும் சிறைத்துறை அதிகாரிகளிடம் சஞ்சனா அடம்பிடித்ததாக தெரிகிறது. ஆனால் இதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து கோழி இறைச்சி வாங்கி தராவிட்டால் கூட பரவாயில்லை, சிகரெட் மட்டுமாவது வாங்கி கொடுங்கள் என்று சஞ்சனா கேட்டுள்ளார். ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் இதற்கு மறுத்ததோடு, அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு சென்றனர். நடிகை ஒருவர் சிக்கனும், சிகிரெட்டும் கேட்டு அடம்பிடிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here